கடலூர்:  கடலூரில் புத்தக கண்காட்சி ஸ்ரீ காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது.கண்காட்சி கடந்த 18ம் தேதி முதல் துவங்கியது. வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியில் 5,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

திருக்குறள், இலக்கியம், அனைத்து எழுத்தாளர்களின் நாவல்கள், பொது அறிவு, கவிதை, சமையற்கலை, சரித்திர நாவல்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது. காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.